ஓசூரில் கட்டுமான பொருட்கள் திருட முயன்றவர் கைது


ஓசூரில்  கட்டுமான பொருட்கள் திருட முயன்றவர் கைது
x

ஓசூரில் கட்டுமான பொருட்கள் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில், கோகுல் நகர் பகுதி அருகில் தனியார் லேஅவுட் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ராஜி (வயது71) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த ஷெட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்து கட்டுமான பொருட்களை திருட முயன்றார். அவரை ராஜி, கையும், களவுமாக பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த நபர், ஓசூர் ராம்நகரை சேர்ந்த கோவிந்தன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story