மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது


மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது
x

நல்லம்பள்ளி அருகே மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தர்மபுரியை சேர்ந்தவர் முகமதுபாயிக் (வயது 26). இவர் நல்லம்பள்ளி அருகே தடங்கம்-சோகத்தூர் ரோட்டில் மருந்து கடை வைத்துள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கடைக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது டிராவில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்கள் திருட்டு போனது.

இதுகுறித்து முகமதுபாயிக் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள க்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது 2 சிறுவர்கள் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம், மருந்துகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக நல்லம்பள்ளி காந்தி நகரை சேர்ந்த 18 வயது, 17 வயது சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவன் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பதும், ஜாமீனில் வந்த அவர் மருந்து கடையில் திருடி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story