கஞ்சா விற்ற 5 பேர் கைது


கஞ்சா விற்ற 5 பேர் கைது
x

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை போலீசார் லளிகம், முக்கல்நாயக்கன்பட்டி பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா பதுக்கி விற்றதாக லளிகம் பகுதியை சேர்ந்த மகாவிஷ்ணு (வயது 38), முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த குமார் (48) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாப்பாரப்பட்டி போலீசார் பூதிநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்றதாக மாரி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மொரப்பூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்றதாக சுரேஷ் (24), அம்பேத்வளவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story