எலக்ட்ரீசியனை தாக்கிய 2 பேர் கைது
பாகலூர் அருகே எலக்ட்ரீசியனை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மதன்குமார் (வயது25), தர்மேந்திரா குமார் (29). இவர்கள் 2 பேரும் பாகலூர் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் காவலாளியிடம் தகராறு செய்தனர். இதை தட்டி கேட்ட பெலத்தூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் (23) என்பவரை இவர்கள் 2 பேரும் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், தர்மேந்திரா குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire