கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x

வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் என்கின்ற கமலேசன் (வயது 43). இவர் மீது வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கஞ்சா வியாபாரி கமலேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கமலேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார். இதுகுறித்த உத்தரவை சிறையில் உள்ள கமலேசனிடம் போலீசார் வழங்கினர்.


Next Story