தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு
சூளகிரி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளகிரி:
ஓசூர் தாலுகா சென்னத்தூர் அருகே உள்ள சானசந்திரம் வாசவி நகரை சேர்ந்தவர் பாரதி (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 18-ந் தேதி இரவு கோபசந்திரத்தில் உள்ள தட்சிண திருப்பதி கோவில் பக்கமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர், பாரதியை வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பாரதி சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் செல்போனை பறித்து சென்றது மேலுமலை அருகே உள்ள ஒட்டையனூரை சேர்ந்த அசோக் (21), வி.மாதேப்பள்ளியை சேர்ந்த அருள் அரசன் (24), பெரியகுத்திபாலாவை சேர்ந்த சின்னபையன் என்கிற சின்னராஜ் (21) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் செல்போனை பறிமுதல் செய்தனர்.