வீடுகளில் மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது
எச்.புதுப்பட்டியில் வீடுகளில் மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
அரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் ஏ.பள்ளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஆனந்தன், சக்திவேல் மற்றும் போலீசார் எச்.புதுப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராணி (வயது 50), கந்தாயி (62) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 731 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story