வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது


வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது
x

இண்டூர் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பட்டுசாமி (வயது 62). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மற்றும் இண்டூர் போலீசார் பட்டுசாமியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து 350 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து பட்டுசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story