கம்பத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


கம்பத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

கம்பத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காந்திசிலை பகுதியில் உள்ள செல்வம் (வயது 32) என்பவரது கடையில் சோதனை செய்தபோது, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த 8 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

இதேபோல் கம்பம் வடக்கு போலீசார் தாத்தப்பன்குளம் பகுதியில் நடத்திய சோதனையில், பன்னீர்செல்வம் (50) என்பவரது கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story