மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்திய வாலிபர் கைது


மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்திய வாலிபர் கைது
x

சாமல்பட்டி அருகே மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சாமல்பட்டி அருகே உள்ள வடுகனூரை சேர்ந்தவர் சாரதம்மாள் (வயது 85). அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (28). உறவினர்கள். அருகருகில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதர், மூதாட்டியின் வீட்டு கதவு மற்றும் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதரை கைது செய்தனர்.


Next Story