பெண் குத்திக்கொலை; ராணுவவீரரின் தந்தை கைது
போடி அருகே பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவவீரரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி, தாத்தப்பசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 42). இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கற்பகம் (35) என்ற மனைவியும், நிஷா (10), நேத்ரா (6) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ரங்கநாதனும், கற்பகமும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி தனது மனைவியை சந்திக்க ரங்கநாதன் வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கநாதன், தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கநாதனை கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த கொலையில் ரங்கநாதனின் தந்தை சீனிவாசனும் (80) உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். மேலும் ரங்கநாதனின் சகோதரர்கள் ஜெயராஜ், கண்ணன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.