கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது


கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற  15 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல், கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி அந்தந்த பகுதி போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொட்டூர் முருகன் (வயது 49), காளிகோவில் முருகன் (38), மங்கல்பட்டி மாதேஷ் (27), என்.கொத்தூர் நாகராஜ் (67) ஆகிய 4 பேரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள்

இதேபோன்று மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக சூளகிரி அலகுபாவி முனுசாமி (65), சிந்தகம்பள்ளி இளங்கோவன் (34), பழைய போச்சம்பள்ளி கலீம் (44), புலியூர் முனவர் (50), கொரம்பட்டி கன்னியப்பன் (34), பாலேகுளி ரமேஷ் (43), தளி சாவித்ரி (60) ஆகியேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சானமாவு அசோக் சக்கரவர்த்தி (47), ஊத்தங்கரை தமிழ்மணி (50), குருகப்பட்டி சிங்காரவேல் (38), ஜிஞ்சம்பட்டி பூபாலன் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story