பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகை அருகே பன்னப்பள்ளி கிராமத்தில் மாந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். இவர்களில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கர்நாடக மாநிலம் மாஸ்தி அருகே ஆலஹள்ளியை சேர்ந்த உமேஷ் (வயது 28), பேரிகை அருகே கே.என்.தொட்டி கிராமத்தை சேர்ந்த அபிஷ்குமார் (26), எலுவபள்ளி ஸ்ரீராம் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். சூதாடிய இடத்தில் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 ஸ்கூட்டர்கள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடி விட்ட, பேரிகை வெங்கடேஷ், குருகுட்டா மணி, தட்டாலபள்ளி மஞ்சு ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story