17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ஓசூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் காத்தமுத்து (வயது22). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு, கம்பி கட்டும் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், ஓசூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நேரில் சந்தித்து நெருங்கி பழகியுள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். தற்போது அந்த சிறுமி, 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி காத்தமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தார். அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story