சுற்றுச்சுவரை இடித்ததாக 4 பேர் கைது
ஊத்தங்கரையில் சுற்றுச்சுவரை இடித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை
ஊத்தங்கரையை சேர்ந்தவர் ஷோபனா (வயது42). ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூர் பக்கமுள்ள புதூரை சேர்ந்தவர் வேடியப்பன் (47). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஷோபனா புதிய வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேடியப்பன் தரப்பினர் அங்கு சென்று தகராறு செய்து சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தி ஷோபனாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடியப்பன், சேட்டு (43), ராதா (42), சின்ன பாப்பா (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story