வடமாநில தொழிலாளி கைது
மத்திகிரி அருகே கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மத்திகிரி
மத்திகிரி அருகே கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரை சேர்ந்தவர் நாகப்பா. இவருடைய மனைவி ஆஞ்சினம்மா என்ற மேரியம்மா (வயது 43). கணவர் இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத் ஜனா என்ற சோனு (22). இவர் மத்திகிரி பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் ஆஞ்சினம்மாவுக்கும், பிரமோத்ஜனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி ஆஞ்சினம்மா வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆஞ்சினம்மா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை பிரமோத் ஜனா அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மத்திகிரி போலீசார் தலைமறைவான பிரமோத் ஜனாவை தேடி வந்தனர்.
வடமாநில தொழிலாளி கைது
இந்தநிலையில் குஜராத் மாநிலம் மார்பி பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான போலீசார் குஜராத் மாநிலத்திற்கு சென்றனர். அவர்கள் அம்மாநில போலீசார் உதவியுடன் பிரமோத் ஜனாவை கைது செய்தனர். பின்னர் அங்குள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நேற்று பிரமோத் ஜனாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஓசூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.