கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது


கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாயுடுபுரம், பாக்கியபுரம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த விஜய் (வயது 22), கீழ்பூமி பகுதியை சேர்ந்த முருகன் (47) என்பதும், சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story