பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது


பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:21 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது40). இவரது நண்பர் மார்கண்டன். தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் மது போதையில் சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த மாதேவி (35) நிலக்கடலையை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். மதுபோதையில் சென்ற குமார், மார்கண்டன் ஆகியோர் மாதேவியிடம் இருந்த நிலக்கடலையை பறித்தனர். இதை கொடுக்க மறுத்த மாதேவியை அவர்கள் தாக்கி அணிந்திருந்த துணியை கிழித்தனர். இது தொடர்பாக மாதேவி அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மார்கண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story