லாட்டரி சீட்டு, மது விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு, மது விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டு, மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

கம்பத்தில், கம்பம்மெட்டு சாலை பகுதியில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த மகாலிங்கம் (வயது 57) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தேனி அருகே வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்துதேவன்பட்டியில் அதே ஊரை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 52) என்பவர் மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story