பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது


பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:10+05:30)

கல்லாவி அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

கல்லாவி அருகே உள்ள ஆனந்தூரை சேர்ந்தவர் சென்னம்மாள் (வயது 54). இவர் வீட்டில் தனியாக இருந்தார். அபபோது அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் திடீரென வீட்டிற்குள் புகுந்தார். அவர், சென்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னம்மாள் கூச்சலிட்டார். இதையடுத்து விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சென்னம்மாள் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story