காரை வழிமறித்து பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
கல்லாவி அருகே வேகமாக சென்றதாக கூறி காரை வழிமறித்து பெண்ணை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை
கல்லாவி அருகே உள்ள பெரியகொட்டகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 27). இவர் நேற்று முன்தினம் மதியம் கல்லாவி அருகே காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் காரில் வேகமாக சென்றதாக கூறி காரை வழிமறித்து ரேவதியிடம் தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்து அவர் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லாவி மேட்டுத்தெருவை சேர்ந்த ரவிவர்மா (30), ராஜ்குமார் (32), சுரேஷ் (36), பிரசாந்த் (30) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story