விவசாயியை தாக்கி ரூ.63 ஆயிரம் பறித்த 2 பேர் கைது


விவசாயியை தாக்கி ரூ.63 ஆயிரம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2023 2:00 AM IST (Updated: 28 Jan 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே விவசாயியை தாக்கி ரூ.63 ஆயிரம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் சிக்கணன் (வயது 67). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம், வடமதுரை அருகே சிக்குபோலகவுண்டன்பட்டியில் உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் அவரது உறவினரான சத்யா (26) என்பவரது தோட்டம் உள்ளது. இந்தநிலையில் சிக்கணனின் தோட்டத்துக்குள் சத்யா விவசாயம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிக்கணன் தனது தோட்டத்திற்கு காரில் சென்றார். அப்போது அங்கு வந்த சத்யா மற்றும் அவரது உறவினர்கள் தோட்டத்தை தங்களுக்கு எழுதி தருமாறு கேட்டு தகராறு செய்தனர். அதற்கு சிக்கணன் மறுத்ததால், அவரை சத்யா மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கினர். மேலும் அவரது கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.63 ஆயிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிக்கணன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சத்யா, சக்திவேல் (45), வெங்கடேஷ் ஆகிய 3 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து, அவர்களில் சத்யா மற்றும் சக்திவேலை கைது செய்தார். தலைமறைவான வெங்கடேசை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story