எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த 2 பேர் கைது
பேரிகை அருகே எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
பேரிகை அருகே சிகரலபள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்த சிலர் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சின்னாரன்தொட்டி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது43), தனஞ்செயன் (36) ஆகியோர் அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்த ஏற்பாடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் எருது விடும் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story