மது விற்றதாக 178 பேர் கைது


மது விற்றதாக 178 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் அனுமதியின்றி மது விற்றதாக 178 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் அனுமதியின்றி மது விற்றதாக 178 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீவிர நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் குட்கா, மது கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது மதுபாட்டில்கள் கடத்தியும், பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதாகவும் 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 200 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

659 கிலோ குட்கா பறிமுதல்

அதேபோல கஞ்சா வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குட்கா விற்றதாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 659 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் லாட்டரி விற்றதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து லாட்டரி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணம் வைத்து சூதாடியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3,980 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story