17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சூளகிரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
சூளகிரி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது28) இவரது மனைவி லலிதா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, லலிதா, கணவரை விட்டு பிரிந்து கர்நாடக மாநிலம் மாலூரில் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி லலிதா, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சுரேசை அழைத்து விசாரித்தபோது, கடந்த 4 மாதத்திற்கு முன்பு 17 வயது சிறுமி ஒருவரை, சுரேஷ் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வருவது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை போக்சோவின் கீழ் கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story