போலி டாக்டர் கைது; ஆஸ்பத்திரிக்கு `சீல்'
ஓசூரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சுகாதார குழுவினர் சீல் வைத்தனர்.
ஓசூரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சுகாதார குழுவினர் சீல் வைத்தனர்.
அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் திருமூர்த்தி (வயது31). இவர் பி.இ.எம்.எஸ். படித்து விட்டு ஓசூர் பேகேப்பள்ளி அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். அங்கு அவர் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.
இது குறித்து பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி தலைமையில் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி மற்றும் குழுவினர், கிராம நிர்வாக அலுவலர், சிப்காட் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று ஆஸ்பத்திரியில் சோதனைநடத்தினர்.
ஆஸ்பத்திரிக்கு சீல்
மேலும் திருமூர்த்தியிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி டாக்டர் என்பதும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ஆஸ்பத்திரி மற்றும் மருந்து கடைக்கும்மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர்.