திண்டுக்கல்லில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


திண்டுக்கல்லில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2023 2:00 AM IST (Updated: 25 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியில், தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ் (வயது 28), மேட்டுப்பட்டியை சேர்ந்த அலெக்சாண்டர் (30) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story