வத்தலக்குண்டுவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது


வத்தலக்குண்டுவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 2:00 AM IST (Updated: 28 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே மேலகோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரரான ராஜா என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருடுபோனது. இதேபோல் குரும்பபட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளும் மாயமானது. மேலும் விளாம்பட்டி பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிள் திருடுபோனது. இதுகுறித்து மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனதால் வத்தலக்குண்டு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது.

இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த அழகுபாண்டி (வயது 28), விளாம்பட்டியை சேர்ந்த சூரியகுமார் (29) ஆகியோர் வத்தலக்குண்டு பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story