கடையில் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
சேலத்தில் கடையில் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 9 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் விசாரணையில் இந்த ரேஷன் அரிசியை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்த குணா (வயது 23) என்பவர் பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் புதுரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தி வந்த பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கனகரத்தினம் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.