ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 49 பேர் கைது


ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 49 பேர் கைது
x

சாமல்பட்டியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சாமல்பட்டியில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் வட்டார தலைவர்கள் தனஞ்செயன், ரவி ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ராமன், விவேகானந்தன் சேவா தளம் தேவராஜன், ஊடகப்பிரிவு கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். ரெயில் மறியலில் ஈடுபட அனுமதிக்க மறுத்து 49 பேரை போலீசார் செய்து சாமல்பட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story