செம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது


செம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2023 2:30 AM IST (Updated: 10 April 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி போதும்பொண்ணு (வயது 48). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (33), பெரியசாமி (24). போதும்பொண்ணுக்கும், இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன், பெரியசாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து போதும்பொண்ணுவை தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து அவர் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், பெரியசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story