குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
சேலத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டை சேர்ந்தவர் பாசில். இவர் செவ்வாய்பேட்டை வெங்கடப்பன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது 30), மஞ்சு (33) ஆகியோர் அங்கு வந்தார். பின்னர் அவர்கள் பாசிலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.850 பறித்துவிட்டு சென்றனர். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாதேஷ், மஞ்சு ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மீது திருட்டு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
தொடந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு துணை கமிஷனர் லாவண்யா பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து மாதேஷ், மஞ்சு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.