சேலத்தில் ஐ.பி.எல். சூதாட்டம்தோற்றவர் பணம் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது


சேலத்தில் ஐ.பி.எல். சூதாட்டம்தோற்றவர் பணம் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2023 1:21 AM IST (Updated: 27 May 2023 12:50 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் தோற்றதால் பணம் கொடுக்க மறுத்த வெள்ளி பட்டறை தொழிலாளியை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐ.பி.எல். சூதாட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் அழகேசன் (வயது 22). வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் நீலமேகம் (24), சரவணன் மகன் வினோத் (24) ஆகியோரிடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2 அணிகள் வெற்றி பெறும் என ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.7 ஆயிரம் என 2 முறை பந்தயம் கட்டியுள்ளார்.

ஆனால் பந்தயம் வைத்த 2 அணிகளும் தோல்வி அடைந்தன. இதையடுத்து சூதாட்ட பணமான ரூ.11 ஆயிரத்தை அழகேசன் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நீலமேகம், வினோத் ஆகியோர் அழகேசனை சோளம்பள்ளம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்து சென்றனர்.

கைது

பின்னர் அவரிடம் சூதாட்ட பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பணத்தை கேட்டு அழகேசனை சரமாரியாக தாக்கியதுடன் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ,4,800, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அழகேசன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலமேகம், வினோத் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் பணம் கொடுக்காத வெள்ளி பட்டறை தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story