திண்டுக்கல்லில் பெண்ணை வெட்டிய டீ மாஸ்டர் கைது
திண்டுக்கல்லில் பெண்ணை வெட்டிய டீ மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த பசீர்அகமது மனைவி ருக்சனா (வயது 38). இவருக்கும், அனுமந்தநகரை சேர்ந்த டீ மாஸ்டர் ராஜ்குமார் (48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் அரிவாளால் ருக்சனாவை வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ருக்சனா, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story