டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு


டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட அண்ணன்-தம்பி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட அண்ணன்-தம்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட அண்ணன்-தம்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அண்ணன்-தம்பி கைது

இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க சணல் குமார் தலைமையில் ஒரு தனிப்படையும், ஜான் போஸ்கோ தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். இதுதொடர்பாக ேபாலீசார் விசாரணை நடத்தி டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்ததாக கயத்தாறு பகுதியை சேர்ந்த மங்கள ராஜா (வயது37), அவரது தம்பி கண்ணன் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவரிகளிடம் இருந்து 360 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அண்ணன், தம்பி இருவரையும் போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story