பெண்ணை தாக்கியவா் கைது


பெண்ணை தாக்கியவா் கைது
x

அம்பையில் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

அம்பை:

மணிமுத்தாறு அருகே உள்ள மேல ஏர்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த மகாலட்சுமி (வயது 40) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரின் தந்தையான முத்துராமனிடம் பேசி பழகி வந்தது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக முன்விரோதம் ஏற்பட்டு இருந்த நிலையில், மகாலட்சுமி வீட்டிற்கு செல்ல மேல ஏர்மாள்புரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மணிகண்டன் அவரை வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மகாலட்சுமியின் சகோதரரான நயினார் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தார்.


Related Tags :
Next Story