விவசாயியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது
விவசாயியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
லால்குடி, ஜூலை.9-
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளமுருகு ராஜா (வயது 50), விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆனந்தி மேடு கிராமத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பவரிடம் தனது குடும்ப செலவிற்காக ரூ.1½ லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு இளமுருகு ராஜா இதுவரை ரூ.5 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மேலும் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 960 கேட்டு இளமுருகு ராஜாவை பாஸ்கர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இளமுருகு ராஜா கொடுத்த புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story