மாநகராட்சி ஊழியர் போல் நடித்து பணம் திருடியவர் கைது


மாநகராட்சி ஊழியர் போல் நடித்து பணம் திருடியவர் கைது
x

மாநகராட்சி ஊழியர் போல் நடித்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி சாஸ்திரிரோடு ராமச்சந்திரபுரம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் ஷர்மா (வயது 66). இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், தான் மாநகராட்சி ஊழியர் என்றும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வந்திருப்பதாகவும் கூறினார். பின்னர் அவர், அஜய்குமார் ஷர்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவர் வீட்டினுள் தண்ணீர் எடுக்க சென்றபோது, வீட்டின் மேஜையில் இருந்த ரூ.3,800-ஐ அந்தநபர் திருடிக் கொண்டு தப்ப முயன்றார். இதை கண்ட அஜய்குமார் ஷர்மா அவரை கையும, களவுமாக பிடித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தில்லைநகர் தூக்குமேடைதெருவை சேர்ந்த மாரிமுத்து (29) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story