அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் தலைமையிலான போலீசார் மணல் திருட்டு சம்பந்தமாக திருச்சுழி அருகே குண்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மாட்டுவண்டி நிற்பதை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் மாட்டுவண்டி அருகே சென்று விசாரணை நடத்தினார். போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பாறைக்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 58) என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் கூடிய மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்தம்பியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story