அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
x

அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி தாலுகா சூரனூர் கிராம நிர்வாக அதிகாரி தனசேகர் (வயது 52). இவரும் தலையாரி பாண்டியும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே.நெடுங்குளம் கண்மாய் மறுகால் ஓடை பகுதியில் சிவலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த செல்லமணி (வயது 46) என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி தனசேகர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன், மணல் அள்ளிய செல்லமணியையும் அ.முக்குளம் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமணியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story