வழிப்பறி வழக்கில் கைதானவாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஸ்ரீவைகுண்டம் அருகே வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த தெய்வச்செயல்புரம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் தங்கராஜ் (50) என்பவரை வழிமறித்து தாக்கி பணத்தை பறித்து சென்ற வழக்கில் மணிகண்டன் (வயது 23), மாரிமுத்து (24), தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த சண்முகம் மகன் கொம்பையா (27) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். இதில் மணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொம்பையா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கொம்பையாவை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.