பல்வேறு வழக்குகளில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பல்வேறு வழக்குகளில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 2:28 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

திருச்செந்தூர் ராஜ்கண்ணா நகர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் தில்வாரா பகுதியைச் சேர்ந்த வினோத் தாரக (வயது 29) என்பவரை கொலை செய்த வழக்கில் திருச்செந்தூர் ராஜ்கண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் கந்தசாமி (22) என்பவரை திருச்செந்தூர் போலீசார் கைது செய்தனர். இதே போன்று முள்ளக்காடு தேவிநகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் என்ற 2ஜி.பி ரமேஷ் (29) என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

மேலும் தருவைகுளம் அருகே உள்ள வெள்ளப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த புளோரன்ஸ் மகன் பட்டுராஜா (36) என்பவரை தருவைகுளம் போலீசார் கைது செய்தனர். இந்த 3 வாலிபர்களும் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கந்தசாமி, ரமேஷ் என்ற 2ஜிபி ரமேஷ், பட்டுராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.


Next Story