பெயிண்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றது ஏன்?-கைதான அக்காள் கணவர் பரபரப்பு வாக்குமூலம்


பெயிண்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றது ஏன்?-கைதான அக்காள் கணவர் பரபரப்பு வாக்குமூலம்
x

பெயிண்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றது ஏன்? என்பது குறித்து கைதான அக்காள் கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன் பேட்டை மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 40). இவருடைய அக்காள் கணவர் கோவிந்தசாமி (45). பெயிண்டர்களான இவர்கள் இருவரும் தங்களுடன் வேலைக்கு வரும் பெயிண்டர் அருள்குமார் (37) என்பவருடன் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் மது குடிப்பதற்காக கன்னங்குறிச்சிக்கு வந்தனர் அங்குள்ள டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி குடித்து விட்டு போலீஸ் நிலைய சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்ேபாது தங்கமணிக்கும், அவருடைய மாமா கோவிந்தசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தசாமி தான் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியால் தங்கமணியின் கழுத்தை அறுத்து விட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தசாமி, அருள்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தசாமி மீது கொலை வழக்கு இருந்ததாகவும், இதனால் 7 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும், அருள்குமார் மீது திருட்டு வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்கமணியின் அக்காள் கோவிந்தசாமியுடன் வாழ பிடிக்காமல் பிரிந்து சென்று விட்டதாகவும், ஆனால் உன் அக்காளை என்னுடன் வாழ வருமாறு நீ கூறு என்று சம்பவம் நடந்த போது தங்கமணியிடம் அவர் வலியுறுத்தியதாகவும், அதற்கு சேர்ந்து வாழ வேண்டும் என்றால் அக்காள் அல்லது மாமியாரிடம் கேள் என்னிடம் ஏன் கேட்கிறாய் என்று தங்கமணி கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்து கோவிந்தசாமி தங்கமணியின் கழுத்தை அறுத்ததாக போலீசார் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story