போலீஸ் நிலையத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
போலீஸ் நிலையத்தில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
மதுரை
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிவகுருநாதன் (வயது 32) என்பவர் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் இருந்து வருகிறார் இந்நிலையில் கச்சிராயன்பட்டியை சேர்ந்த துரை (41) என்பவர், இடம் சம்பந்தமான விசாரணைக்கு கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு காரில் வந்துள்ளார். காரை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்துவிட்டு செல்லும்போது பணியில் இருந்த சிவகுருநாதன், துரையிடம் காரை எடுக்க சொல்லி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவகுருநாதன் மற்றும் போலீசாரிடம் துரை தகராறு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துரையை கைது செய்தனர்.
Related Tags :
Next Story