பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது


பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது
x
திருப்பூர்


அவினாசி அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாகுல் (வயது 35) அட்டை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள், 12 வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணக்குமார் (40) என்பவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. எனவே சுகன்யா தனது கணவர் மற்றும் மகன், மகளை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் கள்ளக்காதலுடன் கருமத்தம்பட்டியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே சுகன்யா சரவணக்குமாரிடம் சண்டையிட்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சரவணக்குமார் ேமாட்டார்சைக்கிளில் சுகன்யாவை ஏற்றி சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் சுகன்யாவை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

கள்ளக்காதலன் கைது

இந்த ெகாலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான சரவணக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

சுகன்யா மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது சுகன்யா, நான் உன்னிடம் இருக்க மாட்டேன் தனது கணவர் பாகுல் இடமே சென்றுவிடுவதாக கூறினார். சுகன்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாலும், கணவரிடம் சென்று விடுவேன் என்று கூறியதாலும் அவரை அடித்து கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சரவணக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story