நெல்லை அரசு பள்ளியில் கலை பண்பாட்டு திருவிழா
நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை பண்பாட்டு திருவிழா நடந்தது.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டு திருவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜான் பாக்கியசெல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு நாட்டுப்புற நடன போட்டி, குழு மற்றும் தனிநபர் நடன போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, அரசினர் மேல்நிலைப்பள்ளி அலுவலர் கனகவல்லி, ஆசிரியர் பயிற்றுனர்கள் அன்னை சிவகாமி, உஷா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story