வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்


வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கினார். தொடக்கக்கல்வி அலுவலர் ஆனந்தன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். நகராட்சி தலைவர் பரிதாநவாப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுனர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த கலைப்போட்டிகளில், கிருஷ்ணகிரி வட்டாரத்தை சேர்ந்த 62 பள்ளிகளில் இருந்து 2000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்கள், வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முடிவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story