தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் கலைவிழா
தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் கலைவிழா நடந்தது
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 'கலைக்களம்-2022' என்ற தலைப்பில் கலைவிழா நடந்தது. 3-ம் நாள் விழாவை பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ராமநாதன் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பம், குழு நடனம், ஊமை நாடகம், பேச்சு போட்டி போன்ற கலை போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். சிவன் வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலாளர் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
கல்லூரி சங்க பொருளாளர் செல்வராஜ் நாடார், கல்லூரி குழு உறுப்பினர்கள் காமராஜ் நாடார், ஜோசப் பெல்சி, டாக்டர் ஆனந்த், பண்ணை கே.செல்வகுமார், ரகுநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்தரராஜ் நாடார், தொழில் அதிபர் கோபால், கண்ணநல்லூர் ெஜயகிருஷ்ணன் ஆகியோர் கலைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் புஷ்பராஜ், ஹரிபிரகாஷ் மற்றும் முருகவேல், அலுவலக கண்காணிப்பாளர் பாலசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.