அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டி
நெல்லிக்குப்பத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டி நடைபெற்றது.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
அண்ணா கிராமம் ஒன்றியத்துக்குட்பட்ட 32 அரசு பள்ளிகளிலும் ஒன்றிய அளவில் கலைத்திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. இதற்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பூங்கொடி முன்னிலை வகித்தார். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் கலைதிறனை வெளிபடுத்தினர். இதில் வட்டார கல்வி அலுவலர் கோபிநாத், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆரோக்கியராஜ், செழியன், ஆசிரியர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story