அரசு பள்ளியில் கலைத்திருவிழா


அரசு பள்ளியில் கலைத்திருவிழா
x

நாகூர் அருகே அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே உள்ள சாமந்தான் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். விழாவில் பேச்சு, ஓவியம், சிற்பம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் வார்டு கவுன்சிலர் அமுதா மோகன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ரஜினி, பள்ளி மேலாண்மை குழுவின் கல்வியாளர் சிவசங்கரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story